வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் - இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
இதுவரை சா்வதேச விமான நிலையங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துவந்தது. ஆனால், இப்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட, கொரோனா வழிகாட்டு நெறிமுறையில்
- அதன்படி, பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் தமிழகம் வருவோருக்கு ஆன்லைன் இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனா் பரிசோதனை செய்யவேண்டும்
- கேரளா மாநிலத்தில் இருந்து, தமிழகம் வரும் பயணிகள் அனைவரும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்.
- சர்வதேச விமான பயணிகளை பொறுத்தவரை, மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.
இது தொடர்பான மேலும் விபரங்களை, www.aai.aero என்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு:-
இ பதிவு விண்ணப்பிப்பது எப்படி?
https://eregister.tnega.org/#/user/pass
முதலில் மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் அடுத்து அதில் நீங்கள் மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகம் வர மற்றவை/ others என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அடுத்து அதில் மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்சாவை பதிவிட்டு சம்பிட் கொடுங்கள்
அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.
அடுத்து வரும் விண்ணப்பத்தில் நீங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அடுத்து சாலை வழியாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது விமானம்/ அல்லது ரயில் மார்கமாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும்.
தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும் அடுத்து அதில் ஏதேனும் ஒரு காரணத்தை பதிவு செய்ய வேண்டும். நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், உடனடியாக இபாஸ் குறிப்பு எண்ணுடன் (SMS) மற்றும் (Email) மின்னஞ்சல் அனுப்பப்படும் .
Tags: தமிழக செய்திகள்