Breaking News

நாளை கரையை கடக்கும் ஜாவத் புயல் ....

அட்மின் மீடியா
0
தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. 



வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரமாக நகர்ந்து நாளை கரைகடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம், 

இதற்கிடையில் தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி. திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எளைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வயைப்புள்ளதாகவுட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால பகுதிகளில் லேசான பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback