அன்னபூரணியின் புத்தாண்டு அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை!
சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் அன்னபூரணி அரசு அம்மா எனும் சாமியார் தான். இவர் தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு பரவசத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.
இவர், கடந்த 2014-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.அப்போது வேறு ஒரு பெண்ணின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது வெளியான காட்சிகள் தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. மேலும் இவர் செங்கல்பட்டு- திருக்கழுக்குன்றம் சாலையில் திருப்போரூர் கூட்ரோடு அருகே அமைந்துள்ள வாசகி மகால் திருமண மண்டபத்தில் வரும் 01.01. 2022 ஆம் தேதி அம்மாவின் திவ்யதரிசனம் பராசக்தி, உலக மக்களை காத்து அருள ஆதிபராசக்தி அம்மா அவதாரமாக வந்துவிட்டாள். வாருங்கள் பக்தகோடிகள் என்ற துண்டு கலர் நோட்டீஸ் அன்னபூரணி என்பவரின் புகைப்படத்துடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.
இந்த நிலையில், இவரை பற்றிய சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதால், செங்கல்பட்டு தாலுகா போலீஸார் சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மண்டப உரிமையாளர், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ரோஹித் என்பவர் தனது திருமண மண்டபத்திற்கு வந்ததாகவும், புத்தாண்டு அன்று கூட்டம் நடத்த அனுமதி கேட்டதாகவும், அதற்கு தான் பத்தாயிரம் ரூபாய் வாடகை கேட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் இந்நிலையில் காவல்துறையினரிடம் அன்னபூரணி ஆதரவாளர்கள் முறையான அனுமதி கடிதம் அளிக்காததால் நிகழ்ச்சியை செங்கல்பட்டு காவல்துறையினர் தடை செய்துள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்