ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு
தூத்துக்குடி துறைமுக தலைவராக உள்ள ராமச்சந்திரன்,
பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ள கோபாலகிருஷ்ணன்,
எரிசக்தி துறை செயலாளராக உள்ள ரமேஷ்சந்த் மீனா,
நிதித்துறை செயலாளராக உள்ள முருகானந்தம்,
புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக உள்ள சந்திரகாந்த் காம்ளே,
சுற்றுச்சூழல் துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகு,
சமூக நலத்துறை செயலாளராக உள்ள சம்புகல்லோலிகர்
ஆகிய 7 பேரையும் அதே பணியில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பணி உயர்வு வழங்கி தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்