முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் மரணம்... நீலகிரியில் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு
நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்தார்கள்
மேலும் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், உணவகங்கள் செயல்படாது எனவும். ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தால் பெரிதும் வேதனைக்குள்ளான உதகை மக்கள் வீரர்கள் உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை முழு கடையடைப்பை கடைப்பிடிக்கவுள்ளனர்.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவகங்கள் உட்பட அனைத்து வகையான கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்