1,000 கோடி வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்ஸ் முழு விவரம்
தமிழகத்தின் பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி வருவாயை மறைத்திருப்பது வருமான வரித்துறையினரின் சோதனையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் பிரபல வணிக நிறுவனமாக சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த ஆய்வில், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி வருமானத்தை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆடைகள் மற்றும நகைகள் கொள்முதல் செய்ததில் ரூ.150 கோடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி ரூ.80 கோடி வருவாயை மறைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த சோதனையின் போது ரூ.10 கோடி ரொக்கமும், ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Tags: தமிழக செய்திகள்