FACT CHECK மாட்டுகறி என்ற பெயரில் கழுதைகறி என்று பரப்படும் வீடியோ உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மாட்டிறைச்சி என்ற பெயரில் இந்திய நிறுவனங்கள் கழுதைகளை அறுத்து மற்ற நாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு/முஸ்லிம் நாடுகளுக்கு விற்பனை செய்கின்றன. தயவு செய்து இந்த காணொளியை பார்த்து அனைத்து இஸ்லாமியர்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் அனுப்பவும்.گائے کے گوشت کے نام پر ہندوستانی کمپنیاں گدھوں کو ذبح کر کے دوسرے ممالک خصوصاً مشرق وسطیٰ/مسلم ممالک کو فروخت کر رہی ہیں۔ براہ کرم اس ویڈیو کو دیکھیں اور تمام مسلمانوں اور مسلم ممالک کو بھیجیں۔👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ மாட்டிறைச்சி என்ற பெயரில் கழுதைகறி ஏற்றுமதி என்பது பொய்யனது ஆகும்,
ஏன் என்றால் உலகில் எந்த நாட்டிலும் இன்னும் ஆடு மாடுகளுக்கு பஞ்சம் ஏற்ப்படவில்லை என்பது தான் உண்மை
மேலும் சீனா, கென்யா நாட்டில் கழுதை கறிகளுக்கான அறுவைகூடமும் அதனை அறுத்து பதடுத்தி கழுதை கறி என ஏற்றுமதி செய்யடும் நிறுவனங்கள் உண்டு,
கறிக்காகவும், மருத்துவத்திற்க்காவும் கழுதை கறி பயன்படுகின்றது என்பது குறிப்பிடத்தட்க்கது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=UBtu2QijQGE
https://www.youtube.com/watch?v=QkuQnPPCyPY&t=14s
Tags: FACT CHECK மறுப்பு செய்தி