FACT CHECK கூட்டமாய்... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மாடுகள் 2020ல் மெக்சிகோவில் நடந்த வீடியோவை ஆந்திராவில் நடந்தது வேலூரில் நடந்தது என பரவும் பொய் செய்தி ? முழு விவரம்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மாடுகள்,ஆந்திரா வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மாடுகள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் மாடுகள் வீடியோ தமிழகத்தில் நடந்தது இல்லை,ஏன் இந்தியாவில் நடந்ததும் இல்லை
பலரும் ஷேர் செய்யும் வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் மாடுகள் வீடியோ
27.07.2020 ம் ஆண்டு மெக்சிகோ நாட்டில் நடந்தது ஆகும்
கடந்த ஆண்டு மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட புயல் மழையால் அங்கு உள்ள சாகுல்வன் நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் ஏராளமான கால்நடைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன
அந்த வீடியோவை கேரள வெள்ளம் பாலாறு வெள்ளம் ஆந்திரா வெள்ளம்,என
தவறாக பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=5IikNWpLx_U
https://comosucedio.com/se-desborda-rio-zacualpan-en-nayarit-y-arrastra-ganado/
Tags: FACT CHECK மறுப்பு செய்தி