மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு புகார் எண் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு புகார் எண் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் வீடுகளில் நீர் புகுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்சாரம் தொடர்பாக பாதிப்புகள் ஏதும் இருந்தால் 9498794987 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் மழைப்பொழிவினை உண்டாக்கியிருக்கிறது. ஓய்வறியா முதலமைச்சர் நேரில் ஆய்ந்து நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரது உத்தரவின்படி, மின்சார வாரியம் கவனத்துடன் செயல்படுகிறது. மின்சாரம் குறித்த புகார்களை மின்னகம் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். என்று பதிவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்