கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு பிரிட்டனில் அனுமதி!
அட்மின் மீடியா
0
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டது. இப்போது அதனை குணப்படுத்தும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் வகையில் ‘மால்னுபிரவிர்’ என்ற மாத்திரை கண்டுபிடித்துள்ளது.
தற்போது அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த பிரிட்டனின் மருந்து சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த கொரோனா மாத்திரையை உலகின் முதல் நாடாக பிரிட்டன் அமல்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை செயலர் சஜித் தெரிவித்துள்ளார்.
Tags: கொரானா செய்திகள்