கிரிப்ட்டோ கரன்சி என்றால் என்ன?
கிரிப்ட்டோ கரன்சி என்றால் என்ன?
கிரிப்ட்டோ கரன்சி என்றால் என்ன?
நம் கையில் இருக்கும் கரன்சி நோட்டுகளை போல தான் இது. ஆனால் அது டிஜிட்டல் வடிவில் கரன்சிகளாக இருக்கும். இதனை வெர்ச்சுவல் கரன்சி எனவும் சொல்லலாம். ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கதாகும். ஆனால் இந்த கிரிப்டோ கரன்சிகள் நாடுகளிலும் செல்லத்தக்கவை. இதற்கு தேவையானது இணைய இணைப்பு.
இதன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம்.சுருக்கமாக சொன்னால் கிரிப்டோ கரன்சி என்றால் டிஜிட்டல் நாணயங்கள். உங்கள் கையில் இருக்காது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். அது டிஜிட்டல் பணம். அதை பார்க்கவோ, தொட்டு உணரவோ முடியாது.டிஜிட்டல் பணத்துக்காக ஒரு குறிப்பிட்ட எண்கள், ரகசிய குறியீடுகள் இணைய தளம் வழியாக நம்மிடம் வழங்கப்படும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது.மேலும் இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை.
Tags: தமிழக செய்திகள்