பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரி விதிக்கிறது. இதுபோக மாநில அரசுகள் வாட் வரி விதிக்கின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எல்லா மாநிலங்களிலும் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால், மத்திய அரசு கலால் வரியை குறைக்க மறுத்து வந்தது.இந்த நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரியில் இருந்து 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் இருந்து 10 ரூபாயும் குறைத்துள்ளது.
இதனால் நாளையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய இருக்கிறது. கலால் வரியை குறைத்ததற்கு ஏற்றவாறு மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு சுமையை குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்