விபத்தில் சிக்கியவர்கள் 48 மணிநேர இலவச சிகிச்சை இலவசம் இன்னுயிர் காப்போம் திட்டம் அறிவிப்பு முழு விவரம்
இன்னுயிர் காப்போம்”திட்டம் அறிவிப்பு தமிழ் நாடு அரசு’
இந்த திட்டத்தின் கீழ்,சாலையில் விபத்து ஏற்பட்டவுடன் அருகாமையில் உள்ள எந்த மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெறலாம்,48மணி நேரத்திற்கான செலவிற்கு அரசு பொறுப்பு.
இதற்காக சாலையோர தனியார் மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகள் என 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன.இதற்காக முதற்கட்டமாக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது
விபத்து ஏற்பட்டவர்களுக்கு உயிரை காக்கவும், நெடுங்கால பாதிப்புகளை குறைக்க தேவைப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட 81 மருத்துவ முறைகளுக்கும் இதில் அடக்கம்.
இதில் சிறப்பு என்னவெனில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவரும் பயன்பெறும் இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அவசர மருத்துவ சேவைகள் சட்டத்தை இயற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்





