பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக “மீண்டும் மஞ்சள் பை” இயக்கம் - தமிழ்நாடு அரசு!
தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகன அசரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. மேலும் கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பிளாஸ்டிக்கு எதிராக மக்கள் இயக்கம் ஒன்றை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக தொடங்கப்படும் என்று அரசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகன அசரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் துணிப்பைகளை பயன்படுத்தும் வகையில் வணிக நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் , மூலம் மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து தமிழக மக்களின் பாரம்பரிய பழக்கமான மஞ்சள் பையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதிமாக 'மீண்டும் மஞ்சள் பை' என்ற பெயரில் மக்கள் இயக்கம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்