கனமழை 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலைய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாளும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
சென்னை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு,
கடலூர்,
நாகப்பட்டினம்,
தஞ்சாவூர்,
திருவாரூர்
மற்றும் மயிலாடுதுறை
ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.21 மற்றும் 11.11.21 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்