அடுத்த 5 நாள்கள் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
07.11.202 இன்று:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும்,
புதுக்கோட்டை ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி. நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,
தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
08.11.2021: நாளை
சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் "புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னநடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
09.11.2021 நாளை மறுநாள்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குடி மின்னலூடன் உடிய கன மழையும், பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
10.11.2021 ம் தேதி
வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அது கனமழையும், வடக்கு கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வானிலை ஆய்வுமைய அறிக்கை:-
Tags: தமிழக செய்திகள்