Breaking News

டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம் :மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் 15.12.2021 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்திற்கு சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.இதனையடுத்து, இந்த சேவை டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் வெளிநாடுகள் 3 வகையாக பிரிக்கப்படும் என்றும் அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து. 

மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை தனித்தனியாக பிரித்து அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதில் வெளிநாட்டினர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திருக்க வேண்டும் என்ற விதி முறையும் அடங்கும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback