Breaking News

உங்கள் ஆதார் அட்டையை யாரேனும் தவறாக பயன்படுத்தியுள்ளார்களா கண்டுபிடிப்பது எப்படி? முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

உங்கள் ஆதார் அட்டையை யாரேனும் தவறாக பயன்படுத்தியுள்ளார்களா கண்டுபிடிப்பது எப்படி? முழு விவரம்.....



உங்கள் ஆதார் எண் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இத்தகைய வசதிகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.



முதலில் UIDAI -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், ஆதார் சேவைகளுக்குச் (Aadhaar Services) சென்று, ஆதார் அங்கீகார வரலாற்றைத் (Aadhaar Authentication History) தேர்ந்தெடுக்கவும்.

அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு கீழ் உள்ள கேப்சாவையும் பதிவிட்டு செண்ட் OTP - என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்து உங்கள் மொபைலுக்கு OTP வரும். அந்த ஓ.டி.பியை  பதிவிட வேண்டும்.

அவ்வளவுதான் உங்கள் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தபட்டுள்ளது என்ற முழு விவரம் வரும்

மேலும் உங்களுடைய ஆதார் சந்தேகத்துக்குரிய வகையில் பயன்படுத்துவதை நீங்கள் கண்டறிந்தால், UIDAI - வாடிக்கையாளர் சேவை மைய எண் 1947 -ஐ தொடர்பு கொள்ளுங்கள். அங்கு, உங்களின் புகாரை பதிவு செய்தால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்

Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback