Breaking News

தேசிய மொழி இந்தி தெரிந்துகொள்வது அவசியம்: சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தமிழில் அறிக்கை வெளியிட்ட சொமேட்டோ நிறுவனம்

அட்மின் மீடியா
0
 தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதுகுறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்ட போது, பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் இந்தியில் பிரச்சனையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.'

இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதனையடுத்து, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கோரியுள்ளது zomato நிறுவனம். அதில்,

வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம்.

பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத் தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை.

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர் மையம் ஆக்கியுள்ளோம். (எடுத்துக்காட்டாக நம் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்)

மேலும், கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால்சென்டர்/சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Give Us Your Feedback