குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும்" : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் ரூபாய் 3 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 2 நவீன சாலை சுத்தம் செய்யும் வாகனங்கள் மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்கு வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,
தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். என்றும் குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
Tags: முக்கிய செய்தி