KVPY: 11,12 மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு :ஆண்டுக்கு மாதம் 5000 உதவிதொகை கல்லூரி படிப்பு முடியும் வரை
திட்டத்தின் பெயர்:-
இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டம் KVPY: Kishore Vaigyanik Protsahan Yojana என்பது, இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையினரால் வழங்கப்படும் ஒரு உதவித்தொகை திட்டம் ஆகும்.
இது மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை அடிப்படை அறிவியல் துறையில் எடுத்து படிக்க ஊக்கம் அளிக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்களுக்கு உதவித்தொகை மற்றும் இடைக்கால மானியங்களை முனைவர்(பிஎச்டி) பட்டப்படிப்பிற்கு முந்தைய நிலை வரை வழங்குகிறது.
யாரெல்லாம் விண்னப்பிக்கலாம்:-
SA திட்டம் 11ஆம் வகுப்பில் அறிவியலை ஒரு பாடமாகப் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
SX திட்டம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அறிவியலை ஒரு பாடமாகப் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
SB திட்டம் இளங்கலை அறிவியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதலாம்.
ஊக்கத்தொகை:-
இளநிலைப் படிப்பு B.Sc /B.S / B.Stat / B.Math மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பு (M.Sc / M.S) படிக்கும் முதல் மூன்று வருட காலத்திற்கு மாதந்தோறும் ரூ.5000/- உதவித்தொகை அளிக்கப்படும்.மேலும் ஆண்டுதோறும் எதிர்பாராத நிகழ்ச்சிச் செலவுகளாக ரூ.20000/- வரை வழங்கப்படும்.
அதன் பிறகு, இதன் தொடர்ச்சியாக முதுநிலைப் படிப்பு (M.Sc / M.S / M.Stat / M.Math) படிக்கும் இரண்டு வருட காலத்திற்கும், ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பு (M.Sc / M.S) படிக்கும் காலத்தில் நான்காம், ஐந்தாம் ஆண்டுகளுக்கு ரூ 7000/- உதவித்தொகையாக அளிக்கப்படும். இதுபோல் ஆண்டுதோறும் எதிர்பாராத நிகழ்ச்சிச் செலவுகளாக ரூ 28 ஆயிரம் வரை வழங்கப்படும்.
மேலும், இவர்களுக்குத் தனி அடையாள அட்டை ஒன்றும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையினைக் கொண்டு இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தேசிய ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆய்வகங்கள் (Laboratory) மற்றும் நூலகங்களைப் (Library) பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வ ின்ணப்பிக்க:-
https://cdn.digialm.com/EForms/configuredHtml/956/71792/login.html
விண்ணப்ப கட்டணம்:-
பொதுப்பிரிவினர் 1250/ ரூபாய்
எஸ்சி, எஸ்டி
மற்றும் மாற்றுத் திறனாளிகள்
625/- ரூபாய்
கடைசி தேதி:-
06.09.2021
மேலும் விவரங்களுக்கு:-
http://kvpy.iisc.ac.in/main/index.htm
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி