இனி வாட்ஸப் வீடியோ காலில் பாஸ்போர்ட் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் மத்திய அரசு அறிவிப்பு
இனி வாட்ஸப் வீடியோ காலில் பாஸ்போர்ட் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் மத்திய அரசு அறிவிப்பு
பாஸ்போர்ட் தொடா்பான குறைகளை தெரிவிப்பதற்க்காக இன்று முதல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரை வாட்ஸ் அப் விடியோ கால் மூலம் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, இன்று முதல், செவ்வாய்க்கிழமை தோறும் பகல் 12:00 மணி முதல், 1:00 ஒரு மணி வரை, வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் பிற உயரதிகாரிகளுடன், 73053 30666 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில், வீடியோ கால் மூலம் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்
மேலும் ஏற்கனவே, மின்னஞ்சல்,டெலிகான்பரன்ஸ், ஸ்கைப், டுவிட்டர் வாயிலாகவும் விண்ணப்பதாரரின் குறைகளை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பெற்று, அவற்றை தீர்த்து வரும் நிலையில், தற்போது, கூடுதலாக, வாட்ஸ் ஆப் வீடியோ முறையில், பாஸ்போர்ட் தொடர்பான குறைகள் தீர்க்கப்படுகின்றன. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு:
Tags: தமிழக செய்திகள்