இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்
அட்மின் மீடியா
0
தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில்:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.மேலும், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்