வீடு ஏசி போட்டது போல் குளு குளுன்னு இருக்க புதிய பெயிண்ட் கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஏசிக்கு நிகரான வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கியுள்ளனர்.
இந்த வெண்மை நிற பெயிண்ட் கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளது. உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள
இந்த வெண்மை நிற பெயிண்ட், சூரிய வெப்பத்திலிருந்து கட்டிடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் குளிர்ச்சியையும் கொடுக்கும் என கூறப்படுகிறது.இந்த பெயிண்ட் 98.1 சதவீதம் அளவுக்கு சூரிய கதிர் வீச்சை பிரதிபலிப்பதுடன், மிகக் குறைந்த அளவே வெப்பத்தை கிரகித்துக் கொள்கின்றது
மேலும் இந்த வெண்மை நிறம் கொண்ட பெயிண்ட் என்ற கின்னஸ் உலக சாதனையையும் இந்த பெயிண்ட் படைத்திருக்கிறது.
வதாகவும் கூறப்படுகிறது. இந்த பெயிண்டை நாம் ஒரு கட்டிடத்தில் அடிக்கும் பொழுது எந்த ஒரு ஆற்றலும் இல்லாமலேயே சுற்றுப்புற வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என கூறப்படுகிறது.