Breaking News

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று முதல் மனு தாக்கல் செய்யலாம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று துவங்க உள்ளது.



தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஆக., 6, 9ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.  இம்மாவட்டங்களில் தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கான மனு தாக்கல் ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான மனு தாக்கல், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

இன்று காலை 10 முதல்மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்படும். 

மனுக்களை தாக்கல்செய்ய வரும் 22-ம் தேதிகடைசி நாளாகும். 

மனுக்களை வரும் 25-ம் தேதி வரை திரும்பப் பெறலாம். அன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்பாளர்களுக்கான வைப்புத் தொகை

பொது வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, 

ஊராட்சித் தலைவர்,

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, 

மாவட்டஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதில் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது.

மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback