நீட் தேர்வில் 2 முறை தோல்வி.. இன்று 3வது முறை தேர்வு எழுதும் முன்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார்.மருத்துவராக வேண்டும் என்ற தன் ஆசையில் கடந்த இரண்டு வருடங்களாக நீர் தேர்வு எழுதியுள்ளார்.
இரண்டு முறையும் மாணவன் தனுஷ் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத மாணவன் தனுஷ் தயாராக இருந்த நிலையில், வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சனிக்கிழமை நள்ளிரவு வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்