சென்னையில் இலவச வைஃபை..பயன்படுத்துவது எப்படி ?
சென்னையில் 49 இடங்களில் 30 நிமிடங்களுக்கு இலவசமாக wi-fi தொடர்பை பெறலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு wi-fi தொடர்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.
இலவச வைபை பெறுவது எப்படி:-
உங்கள் மொபைல் போனில் வைபை சென்று அதில் உள்ள free wifi எனபதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
அடுத்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து ஓக்கே கொடுங்கள் அடுத்து உங்கள் போனுக்கு வரும் OTP மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
இலவச வைபை வசதி உள்ள இடங்கள் பட்டியல்:-
https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf
Tags: தமிழக செய்திகள்