Breaking News

பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

அட்மின் மீடியா
0

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்



அதில்  வேளாண் துறை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பாக, 2500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

ரேசன் கைடகள் மூலம் பனை வெல்லம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் ஏரிக் கரைகளிலும், சாலையோரங்கலிலும் மரங்களை வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதையப் பெறுவது கட்டாயம். 

குறைந்து வரும் பனை மரங்களை காக்கும் நோக்கத்தில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பணை விதைகளும், ஒரு லட்சம் மனை மரக் கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும்.பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்த ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்''என்று அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback