வெளிநாட்டினர் உம்ரா பயணம் செய்ய அனுமதி சவூதி அரேபியா அறிவிப்பு
இஸ்லாமியர்களில் புனிதத் தலமான மெக்கா சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் முழுவதும் உம்ரா பயணம் மற்றும் வருடத்துக்கு ஒரு முறை ஹஜ் பயணம் என இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கில் வருவது வழக்கமாகும்.
இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் மெக்காவில் மக்கள் அதிக அளவில் கூடினால், கொரோனா எளிதில் பரவக்கூடும் என்பதால், உம்ரா பயணத்துக்கு யாரும் வரக்கூடாது என உம்ரா பயணத்தை சவுதி அரசு ரத்து செய்தது.
தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கொரானாதடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் சவூதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் தற்போது உம்ராபயணம் செய்ய சவுதி அனுமதியளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
தற்போது மாதந்தோறும், உள்நாட்டு யாத்ரீகர்கள் சுமார் 60,000 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை, வரும் மாதங்களில் 2 மில்லியனுக்கு அதிகரிக்கும் என்று சௌதி ப்ரஸ் ஏஜென்சி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்