Breaking News

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.. தமிழக அரசு !!

அட்மின் மீடியா
0

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

 


தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் வரும் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பள்ளி, அரசுக் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Share this