இனி இரவிலும் தாஜ்மஹாலை பொதுமக்கள் ரசிக்கலாம்
அட்மின் மீடியா
0
கொரோனா ஊரடங்கினால் கடந்தாண்டு மார்ச் 17ம் தேதி முதல் தாஜ்மகாலை இரவு நேரத்தில் பார்வையிடுவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் இது இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாஜ்மகாலை இரவு நேரத்தில் இரவு எட்டரை மணியில் இருந்து பத்து மணி வரை, அரை மணி நேரத்துக்கு 50 பேர் மட்டும் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்ட் 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு ஆகிய நேரங்களில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஒரு நேரத்தில் 50 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக, ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்
Tags: இந்திய செய்திகள்