டிஜிட்டல் மின் மீட்டரில் ரீடிங் பார்ப்பது எப்படி? இந்த மாதம் மீட்டர் ரீடிங் எவ்வளவு என பார்ப்பது எப்படி?
டிஜிட்டல் மின் மீட்டரில் ரீடிங் பார்ப்பது எப்படி?
உங்கள் மின் மீட்டரில் இடது பக்கம் இருக்கும் பட்டனை அழுத்துங்கள் முதலில் DATE காட்டப்படும்.
மீண்டும் அந்த பட்டனை அழுத்துங்கள் அடுத்து அதில் TIME காட்டப்படும்.
அடுத்து மீண்டும் அழுத்துங்கள் இப்பொழுது மீட்டர் பாக்சில் நாம் எவ்வளவு பயன்படுத்தியுள்ளோம் என்பதை காட்டும்.
அதாவது அதில் காட்டப்படும் நம்பருக்கு பக்கத்தில் KW h என இருக்கும் அதுதான் நாம் பயன்படுத்திய மின் யூனிட் அதில் எவ்வளவு யூனிட் காட்டுகிறதோ அவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து உங்கள் மின் அட்டையில் கடைசியாக குறித்த Reading-யும், இப்பொழுது குறித்து வைத்துள்ள Reading-யும் கழித்து பாருங்கள் மீதம் வருவதுதான் உங்கள் இந்த மாதம் மின் ரீடிங்
உதாரணத்திற்கு 1980 கடைசியாக Reading check செய்தது என்று வைத்து கொள்ளலாம். 2204 என்பது தற்போது Reading check என்று வைத்து கொள்வோம். இவற்றை இரண்டியும் கழித்து பார்த்தால் 2204-1980 = 224 என்று வரும். இதுதான் நாம் இதுவரை பயன்படுத்திய யூனிட்.
Tags: முக்கிய செய்தி