Breaking News

கட்டின சம்சாரத்துகிட்ட காலம் பூரா விட்டுகொடுக்கனும்|. அடுத்தவங்க முன்னாடி சம்சாரத்த விட்டு கொடுக்க கூடாது |நெரிசல் மிகு சாலையில் டிராபிக் எஸ் ஐ மனம் கவர்ந்த பேச்சு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி.போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்.


வாங்க பொறுமையா வாங்க..பொறுமையா வந்தா, வாழ்க்கை அருமையா இருக்கும்... வாங்கயா... என்னய்யா கொண்டு போக போறோம்... இருக்கிறதை வச்சு வாழ்ந்தா போதும்

எல்லாமே ஈசியா கிடைச்சுட்டா, அப்பறம் என்னய்யா வாழ்க்கை? போராடனும்; ஜெயிக்கணும்... உலகத்துக்கு வரும் போது வெறும் கையோட வரணும், போகும் போது வீடு, வாச, காசு, பணம் எல்லாம் சேத்துட்டு வணக்கம் சொல்லிட்டு போயிக்கிட்டே இருக்கணும்... அதுக்கு பேரு தான் திறமை.

குடும்பம் குட்டிங்க இருக்காங்க... பாத்து சூதானமா போங்க... ரோடுன்னா சிக்னல் இருக்கும்; மனிதன் என்றால் சிக்கல் இருக்கும்... குடும்பம்னா சண்டை இருக்கும்... எல்லாத்தையும் அனுசரிச்சு விட்டுக்கொடுத்து போகனும்

விட்டுக்கொடுக்கனும்... அம்மாட்ட விட்டுக் கொடுக்கணும், அப்பாட்ட விட்டுக் கொடுக்கணும்... சம்சாரத்துக் கிட்ட காலம் பூராவும் விட்டுக் கொடுக்கனும்... அடுத்தவங்க கிட்ட மனைவிய விட்டுக் கொடுக்கவே கூடாது..."அது தான் வாழ்க்கை..

என்று அவர் பேசிய வீடியோவை பார்த்து நெகிழ்ந்த சென்னை காவல்துறை குற்றப்பிரிவு எஸ்பி அர்ஜுன் சரவணன், அவரை பாராட்டியதுடன், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்


வீடியோவை பார்க்க:-

https://twitter.com/ArjunSaravanan5/status/1428683737861181442


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback