Breaking News

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? - முதல்வர் ஆலோசனை..!

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில்,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


ஆனால் தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆலோசனை முடிவில் ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback