ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது
அட்மின் மீடியா
0
டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் ஆட்ட இறுதியில் 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் வென்றது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்