பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய மனித மிருகம் கைது..!
பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 37) இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசி (22) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து துளசி ஆந்திராவில் உள்ள அவரது தாயார் வீட்டில் உள்ளார் . கணவருடன் பிரிந்த ஆத்திரத்தில் பெற்ற தாய் என்றும் பாரமால் தன் குழந்தையை கொடுரமாக அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோக்கள் அனைத்தும் சுமார் 1/2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகும்
தற்போது குழந்தை தந்தையின் பொறுப்பில் நலமாக உள்ளது. மேலும் துளசியின் கணவர் வடிவழகன் அளித்த புகாரின் அடிப்படையில் துளசி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்திற்கு சென்று துளசியை இன்று கைது செய்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்