தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ,ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
08.08.2021 கோயமுத்தூர், தேனி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திண்டுக்கல் , மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
09.08.2021 அன்று கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் , திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யலாம்.
10.08.2021 நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், திண்டுக்கல், சேலம் ,கள்ளக்குறிச்சி ,அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்,
11.08.2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் , தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் , இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
Tags: தமிழக செய்திகள்