Breaking News

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 




இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: 

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாநில சட்டப் பேரவை முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் இரண்டு காலியிடங்களுக்கான தேர்தல் கடந்த 11ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு அப்துல் சமது மற்றும் முகமது ஷாநவாஸ் ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

தேர்தலில் இரண்டு காலியிடங்களுக்கு இரண்டு பேர் மட்டுமே போட்டியிடுவதால், 

இவர்கள் இரண்டு பேரும் போட்டியின்றிதமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். என  அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகார பூர்வ அறிக்கை படிக்க:

https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr190821_t_631.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback