Breaking News

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 25,000/- அபராதம் விதிப்பு

அட்மின் மீடியா
0

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ரூ.25000 அபராதம் விதித்துள்ளது. 




சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மறுசுழற்சி செய்ய இயலாத ப்ளாஸ்டிக் வகைகளை பயன்படுத்த தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. 

இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலமாக விமானத்தில் பயணம் செய்ய கூடிய நபர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் மூலம் முக கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு தயாரித்து வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது ,

அதன் அடிப்படையில் அந்த முக கவசம் மற்றும் பேஸ் ஷீல்டை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக ஆய்வு மேற்கொண்டதில் அந்த பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் அடுத்த 7 நாட்களுக்குள் 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும் என இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback