FACT CHECK; மேற்கு வங்கத்தில் மருத்துவமனைக்கு செல்வதை முஸ்லீம்கள் தடுப்பதாக வலம் வரும் வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நீங்கள் வீடியோவில் நீங்கள் காண்பது மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜியின் ஆட்சியின் கீழ் இருக்கும் நியூ கூச்பிஹர் என்ற ஊரிலிருந்து உடல்நசரியில்லாத ஒரு ராணுவ அதிகாரியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தடுத்து நிறுத்தி இங்குள்ள முஸ்லிம்கள் செய்யும் அராஜகத்தை பாருங்கள் ராணுவத்திற்கு இந்த நிலை என்றால் சாதாரண இந்துக்களாகிய நாம் என்ன செய்ய முடியும் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்தியாவில் நடந்தது இல்லை, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்தது ஆகும்
கடந்த மார்ச் 26-ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்களாதேஷ்
சுற்றுப்பயணத்திற்காக டாக்கா சென்றார். அவரின் வருகையை எதிர்த்து அந்நாடு
முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றுள்ளது
அந்த வீடியோ காட்சியும் அங்கு எடுக்கப்ட்டது தான் ஆர்பட்டத்தில் நடந்த சம்பவம் தான் அந்த வீடியோவும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி