Breaking News

சவூதியில் இருந்து இந்திய நாட்டுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் யாருக்கெல்லாம் பொருந்தும்

அட்மின் மீடியா
0

பலநாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதை தடுக்க சவுதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது. 

 


இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோபியா, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 13 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை விதித்துள்ளது 

அப்படி விதிகளை மீறி செல்பவர்கள் சட்டப்பூர்வமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். என்வும் தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு சவுதி அரேபியா திரும்பும்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். என்வும் அவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு மூன்றாண்டு தடை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது

கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வராத அல்லது புதிய வகை வைரஸ் பரவி வரும் நாடுகளுக்கு நேரடியாக அல்லது வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்தோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 இந்த சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்:

இந்த சட்டம் சவூதி குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்


சவூதியில் வேலைக்கு சென்றவர்களுக்கு இது பொருந்துமா

கண்டிப்பாக பொருந்தாது 

https://twitter.com/MOISaudiArabia/status/1419992503323877376

 


 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback