BREAKING :கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா அதிகார பூர்வ அறிவிப்பு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகாலம் நிறைவடைந்த நிலையில் எடியூரப்பா ராஜினாமா கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை
மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் மேலும் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளேன். அதன்பிறகு கட்சித் தலைமை முடிவு செய்யும். கட்சிக்காக விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார்
75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.
ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு
முதல்-மந்திரி பதவியை பாஜக மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள்
முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை
விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி
எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2
ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் இன்று முத்ல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
Tags: இந்திய செய்திகள்