Breaking News

தமிழகத்தில் ஆகஸ்டு 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டிப்பு  புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை

 

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில், கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாகவைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் 

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதைச் சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

அனைத்துக் கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக /இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு அறிவிப்பை படிக்க:-

https://drive.google.com/file/d/1OFF8U0ZVAbKuTzoVVwk8NELGZWxkHG9O/view?usp=sharing





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback