ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சவூதி வர அனுமதி!
18 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் செளதி அரேபியா18 மாதங்களுக்குப் பிறகு செளதி அரேபியா அரசு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களைத் திறக்க உள்ளது.
கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த 18 மாதங்களாக செளதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கொரானா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் சுற்றுலாவை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களை அந்நாட்டு அரசு திறக்க உள்ளது.
மேலும் சுற்றுலா பயனிகள் சவுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டு இருக்கவேண்டும்
இந்த தடுப்பூசி பெற்றவர்கள் தனிமைப் படுத்தல் இல்லாமல் சவூதிக்குள் நுழைய முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்