உலமாக்கள் நலவாரியத்தில் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன உதவிகள் இருக்கிறது ? அவைகளை எப்படி பெறுவது முழு விவரம்....
அட்மின் மீடியா
0
உலமாக்கள் நலவாரியம் என்றால் என்ன:
உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” துவங்கப்பட்டது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கு என உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
உலமாக்கள் நலவாரியத்தில் யாரெல்லாம் பதிவு செய்யலாம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
உலமாக்கள் நல வாரியத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறை
உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கான விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெறலாம்.
விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலருக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை ஆய்வு செய்து விண்ணப்பதாரரை வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து உறுப்பினருக்கு அடையாள அட்டையை வழங்குவார்.
முக்கிய குறிப்பு:
இதன் உறுப்பினர்கள் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் பதிவுகாலம் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. 5 ஆண்டுகளுக்கு பின் ரினியூவல் செய்யவேண்டும்.
பதிவு பெற்ற உறுப்பினருக்கும் ஓர் அடையாள அட்டை இலவசமாக வாரியத்தால் வழங்கப்படும். அடையான அட்டையை இழந்துவிட்டால் ரூ.20/- செலுத்தி மாற்று அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
பதிவுபெற்ற உறுப்பினர் இறப்பின் அவரது குடும்பத்திற்குச் சேர வேண்டிய நிதியுதவியைப் பெறுவதற்கு நியமனதாரரின் பெயர், முகவரி மற்றும் உறவு ஆகிய விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
நியமனதாரரை நியமிக்கும் பொழுது உறுப்பினரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரையோ நியமனதாரராக நியமிக்க வேண்டும்.
உலமாக்கள் நலவாரியத்தில் வழங்கப்படும் உதவிதொகை விவரம்...
1.முதியோர் ஓய்வூதியத் திட்டம்
2.ஈமச்சடங்கு உதவித்தொகை
3.இயற்கை மரண உதவித்தொகை
4. விபத்தால் இறந்தால் மரணம் மற்றும் நிவாரணத் தொகை
5.கல்வி உதவித்தொகை
6.திருமண உதவித்தொகை
7. மகப்பேறு/கருச்சிதைவு உதவித்தொகை
8.கண்கண்ணாடி வாங்குவதற்கு உதவித்தொகை
9.விபத்தால் உடல் உறுப்புகளை இழப்பின் உதவி தொகை
விண்ணப்ப படிவங்கள்:
உறுப்பினராக பதிவு செய்வதற்கான விண்ணப்பபப் படிவம்
அடை யான அடையாள அட்டை படிவம்
உறுப்பினர்கள் விபத்தினால் இறப்பு அல்லது ஊனம் ஏற்படின் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை கேட்பு விண்ணப்ப படிவம்
உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர் இயற்கை மரணம் / ஈமச்சடங்கு உதவித் தொகை பெற விண்ணப்பப்படிவம்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பப் படிவம்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலுவதற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பப் படிவம்
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு / தொழிற்கல்வி பட்ட படிப்பு / தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு பயில்வதற்கு உதவித்தொகை கல்வி பெற விண்ணப்பப் படிவம் - 7
குடும்ப உறுப்பினர் திருமண உதவித்தொகை பெற விண்ணப்பப் படிவம் - 8
குழந்தை பிறப்பு அல்லது கருச்சிதைவிற்கான உதவித்தொகை வழங்குதற்கான விண்ணப்பப் படிவம்
கண் கண்ணாடி வாங்குவதற்கு உதவித் தொகை கோரும் விண்ணப்பப் படிவம்
முதியோர் ஓய்வூதியம் கோரும் விண்ணப்பப் படிவம்
முடக்க ஓய்வூதியத்திற்கான விண்ணப்பபடிவம்
அனைத்து விண்ணப்ப படிவங்களையும் டவுன்லோடு செய்ய
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி முக்கிய செய்தி