Breaking News

FACT CHECK: தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடாமல் வெறும் ஊசி மட்டும் போடுகின்றார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கவனம்.. தடுப்பூசி முகாம்களில் ஊசி போடுவது போல ஊசியை உடலுக்குள் சொருகி,  சிரிஞ்சை அழுத்தாமல் மருந்தை மீண்டும் பாட்டிலுக்குள் ஊற்றி வெளியே விற்கும் அவலமும் அரங்கேறத்தொடங்கி விட்டது...* 👇என்று  ஒரு வீடியோவை  ஷேர் செய்து  வருகின்றார்கள்.





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்தியாவில் நடந்தது இல்லை, மாறாக மெக்சிகோவில் நடந்தது ஆகும்

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் கடந்த 03.04.2021 அன்று மெக்சிகோவின் தேசிய உயிரியல் அறிவியல் பள்ளியில் கொரானா தடுப்பூசி முகாமில் நடந்தது 

இந்த சம்பவம் குறித்து மெக்சிகன் இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் செக்யூரிட்டி  தன் ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் 

அந்த நபரின் உறவினர்களால் அந்த வீடியோ எடுக்கபட்டது அதன்பிறகு அந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரிந்தது மேலும் அந்த நபருக்கு மீண்டும் கொரானா தடுப்பூசி போடப்பட்டது

அந்த செவிலியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார், அந்த செயலுக்கு அந்த செவிலியர் மன்னிப்பும் கேட்டுள்ளார்

ஆனால் சமூகவலைதளங்களில் பலரும் இந்தியாவில் நடந்தது என பொய்யாக  பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=KciX--g6hrU

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


 


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback