Breaking News

BREAKING: 2-ம் தவணை கொரோனா நிவாரணம் ரூ.2,000- நாளை தொடக்கம்..!

அட்மின் மீடியா
0

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கொரானா நிவாரண நிதி 2வது தவனையாக  ரூ 2,000 வழங்கும் திட்டத்தை  நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்!



முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக கொரானா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் அதில் முதல் தவனையாக உடனடியாக  ரூ. 2,000 வழங்கப்படும் என கையெழுத்திட்டார்

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும் தமிழக முதல்வரின் தந்தையுமான கருணாநிதி அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு  நாளை இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தொகையும், 14 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்

Share this