Breaking News

பொதுமக்களே கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க: சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக குமரி மாவட்ட காவ‌ல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ

அட்மின் மீடியா
0
சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக குமரி மாவட்ட காவ‌ல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ





தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு கைகொடுக்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது. மொபைல், கம்ப்யூட்டர், இணையம் போன்றவற்றில் நடைபெறும் குற்றங்கள் சைபர் கிரைம் என்று அழைக்கப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக இணையதள பயன்பாடு அதிகரிப்பிற்கு பிறகு சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

தகவல் தொழிநுட்ப சேவைகளை திருடுவது 

தகவல்களை அழிப்பது 

இணயத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது 

மற்றவர்களின் தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது. 

சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது 

மற்றவர்களின் மின்னஞ்சல் மற்றும் சோசியல் நெட்வொர்கிங் கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது.

ஆபாச பதிவுகள், 

சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் தவறான மற்றும் பிளவுபடுத்தும் பதிவுகள் 

ஈமெயில் மூலமோ, போன் மூலமோ தொடர்பு கொண்டு ஒருவருடைய வங்கி கணக்கு எண், கடவுச்சொல், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்றவற்றை திருடுவது அல்லது நம்பிக்கைக் குரிய வகையில் பேசி பெறுவது 

என அனைத்து வகையிலும் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் பெருகிவருகின்றது, எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக குமரி மாவட்ட காவ‌ல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ




Tags: முக்கிய செய்தி வைரல் வீடியோ

Give Us Your Feedback