பஞ்சாப்பில் இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டித்தரும் சீக்கியர் மற்றும் இந்து மதத்தினர். வீடியோ
பஞ்சாப்பில் இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டித்தரும் சீக்கியர் மற்றும் இந்து மதத்தினர்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகாவில் உள்ள பூலார் என்ற கிராமத்தில் தற்போது 4 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளார்கள், 1947-ல் பிரிவினைக்கு முன்னர் இங்கு ஒரு மசூதி இருந்தது. ஆனால் அது காலப்போக்கில் இடிந்து விழுந்தது. ஆகையால் அவர்களுக்கு என்று அந்த கிராமத்தில் மசூதி இல்லை. மேலும் அந்த 4 இஸ்லாமிய குடும்பங்கள் அந்த கிராமத்தை விட்டு சென்று வேறு ஊர்களுக்கு செல்ல அவர்கள் முடிவெடுத்த நிலையில் கிராம மக்கள் ஒன்றுகூடி மசூதி முன்பு இருந்த நிலத்தில் மீண்டும் அவர்களுக்கு மசூதி கட்டித்தருவது என்ற முடிவை எடுத்துள்ளனர்.
இந்த கிராமத்தில் ஏழு குருத்வாராக்கள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன. ஆனால் மசூதி இல்லை இனி அந்த குறை இருக்காது நீங்கள் எங்கும் செல்லவேண்டாம் இங்கேயே இருங்கள் என்று கூறிய கிராம மக்களின் செயலால் அந்த இஸ்லாமிய குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது
மேலும் புதிய மசூதி கட்டுவதற்காக அனைத்து கிராம மக்களும் தங்களால் ஆன பொருளாதார உதவும் செய்துள்ளார்கள். தற்போது அங்கு மசூதி அடிக்கல் நாட்டும் நடந்து மசூதி கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றது
https://www.youtube.com/watch?v=XcFRuC2q6JA
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி