Breaking News

அரசு கேபிள் டிவி பற்றி புகார் அளிக்க..........கட்டணமில்லா தொலைபேசி எண்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணமின்றி, இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. 

இது மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த கட்டணம் ஆகும்.குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்களை வழங்கி வருகின்றது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். 

அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 180042 52911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

 

புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 

18004 252911 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback